திண்டுக்கல்லில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நடைபெற்றது திண்டுக்கல் பேருந்து நிலையம், நத்தம் ரோடு குடகனாறு இல்லம் அருகே மற்றும் ரெட்டியார் சத்திரத்தில், தேசிய செயலாளர் மாவட்டச் செயலாளருமான ஜெயராம் சந்தனதேவர் தலைமையில் கட்சியின் கொடியேற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட தலைவர் மணித்தேவர், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ் ராஜ், பாலு, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பசும்பொன் வடிவேல், தொழிற்சங்க நிர்வாகி சந்துரு, ஜேக்கப், மாநகர பொறுப்பாளர்கள் திவாகர், முத்து, அருள், குணசீலன், ஜோதி, ராஜபாண்டி, பிரசாந்த், பிரவீகுமார், ஹரிகரன், செல்வம்,பாபு, மௌனஜோதி, உட்பட மாவட்ட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



