நாகர்கோவில், டிச. 8 –
நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (29) கூலித்தொழிலாளி. இவர் மீது ஆசாரிப்பள்ளம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பட்டியலில் ஏ கிரேடு பிரிவில் இவர் பெயர் உள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் அந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு பின்னால் பதுங்கி இருந்து அங்குள்ள இளம் பெண் குளிப்பதை நிஷாந்த் ரகசியமாக பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இளம்பெண்ணின் பெற்றோர் நிஷாந்தை கண்டித்தனர். அப்போது அவர்களிடம் அப்படித்தான் பார்ப்பேன் என்று கூறி, இளம் பெண்ணுக்கும் அவர் தாயாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உட்பட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பகுதி செய்து கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.



