மதுரை, அக்.08
மதுரை மாவட்ட தொழில் மையம், Walmart International, Guidance Tamil Nadu மற்றும் மடீட்சியா இணைந்து நடத்திய “MSMEs-க்கான ஏற்றுமதி” (Export for MSMEs) திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி, மடீட்சியா ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் K. அன்பழகன், DIC பொது மேலாளர் S. கணேசன், மடீட்சியா தலைவர் V. செந்திகுமார் மற்றும் துணைத் தலைவர் J. முகமது யாசிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
MSMEs நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு குறித்து நிகழ்வில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.



