நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கான அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு நெல் கொள்முதல் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முதுநிலை மண்டல மேலாளர் எஸ்.ஆர்.கோபிநாத், மேலாளர் நிர்வாகம் மோகன், கொள்முதல் அலுவலர் தமிழழகன், தொமுச மண்டல செயலாளர் ஆபிரகான் லூதர்கிங், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதாசன், மாவட்ட பிரதிநிதி ஸ்டாலின்,மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.