சேவூர், நவ.10- அவினாசி பேரூராட்சிக்குட்பட்ட அவினாசி-கோவை பிரதான சாலை, பழைய – புதிய பஸ் நிலையம் வரையிலான பகுதி, சேவூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. வணிக நிறுவனங்களின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில் இப்பகுதிகளில் சாலையோர வியாபாரம் அதிகரித்துள் ளதால், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்தக்கோரி மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோரிடம் வணிகர் சங்கத்தினர்.
மனு அளித்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் நிரந்தரத் தீர்வு கிடைக்காததால், தீபாவளி வியாபாரமும் பாதிக்கப்பட்டதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர். கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பேரூராட்சிக்கு சொத்து ‘வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவ தில்லை என அறிவுத்துள்ளனர்.
இதற்கிடையில், கோரிக்கையை வலியுறுத்தி வணிகர் சங்கத் தினர் நேற்று திடீரென்று அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத் துக்கு சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தகவலறிந்து சம்பவஇடத்துக்கு வந்த அவினாசி வருவாய்த்துறை யினர், காவல் துறையினர், பேரூராட்சியினர் உள்ளிட்டோர், வணிகர் சங்கத்தினரை தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து பேச் சுவார்த்தை நடத்தினர். இதில், ஞாயிற்றுக்கிழமை சாலையோர வியாபாரிகள் குறித்துகள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 13-ந் தேதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைய டுத்து வணிகர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.