மருங்கூர் நவ 11
தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவான சூரசம்ஹார நிகழ்வுக்கு பின்பு சுப்ரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மயிலாடி நாஞ்சில்நடு புத்தனார் கால்வாய் அருகே தீர்த்தவாரி மடத்தில் ஆற்றில் இறங்கும் ஆராட்டு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அதன்பின்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அருள் பாவித்து முக்கிய வீதிகள் வழியாக மருங்கூர் திருக்கோவிலுக்கு செல்வது வழக்கம் .மேலும் ஆராட்டுவிழா நாட்களில் மயிலாடி தமிழ் ஆர்வலர்கள் ஒன்று கூடி மயிலாடி ஆராட்டு கலை இலக்கியப் பேரவை அமைப்பை உருவாக்கினர்.சாதி சமயதிற்கு அப்பாற்பட்டு தமிழர் என்ற சிந்தனையோடு ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர் பேரவை சார்பாக 5 நாட்கள் இலக்கிய விழா பட்டிமன்றம் சமய சொற்பொழிவு, மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகள், சமூக விழிப்புணர்வு , பத்து மற்றும்,+2 வில் தமிழில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கபடுகிறது தலைவர் நாகராஜன், செயலாளர் கணேசன்