கருங்கல் அருகே உள்ள மத்திகோடு றிங்கல்தௌபே மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 100 % தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இப்பள்ளி மாணவி பெனி பிறைசி 600-க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்று உள்ளார். மாணவி அக்சய தாரணி 555 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி ஜெர்ஸிலின் 553 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்று உள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை பள்ளி பொறுப்பாளர்கள் போதகர்கள் சாது செல்வன், ஜெகதீஷ் லால் ரெகு, தாளாளர் விக்டர் பென்னட், ஜஸ்லின் ஜெ. கிறிஸ்டோபர், செல்வராஜ் மற்றும் பிரைட் டேவிட், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.



