ராமநாதபுரம், நவ.29-
தமுமுக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொண்டி பேரூர் தமுமுக அலுவலகத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் ஜாவித் அஸாம் தலைமையில் நடைபெற்றது.
மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்தினார். தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பனைக்க்குளம் அசன், ஆனந்தூர் உபைதுல்லா நிஸார் சகுபர், தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் மைதின், பரக்கத் அலி, ஹம்மாது உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது;
பாபர் மஸ்ஜித் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டு தளங்களை பாதுகாத்திட கோரியும்
ஏராளமான பள்ளிவாசல்களையும் அதன் சொத்துக்களையும் பலவந்தமாக பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர துடிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரியும்
உ.பி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கலாச்சாரத்தால் இடித்து தள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகளையும் மீண்டும் கட்டித்தர கோரியும்
தமுமுக தலைமையில் 10 மண்டலங்களில்
பெருந்திரள் மக்கள் போராட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில்
டிசம்பர் 6, 2024 வெள்ளிகிழமை மாலை 4 மணி
இராமநாதபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் அதிகமான மக்கள் அழைத்துச் செல்வது என பேசினார்.
நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிரான இந்த போராட்டம் வெற்றி அடைய நியாய சிந்தனையுடைய அனைத்து மக்களும் கலந்து கொள்ள கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. தொண்டி பேரூர் தலைவர் காதர் நன்றி கூறினார்.