குளச்சல், மார்-2
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரளா பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இக்கோவில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் இன்று 2-ம் தேதி காலை திருக்கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை காலை 4:30 மணிக்கு திரு நடை திறக்கப்படுகிறது. ஐந்து மணிக்கு கணபதி ஹோமம், 6:30க்கு உஷ பூஜை நடக்கிறது. காலை 7: 21 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் திருக்கொடி ஏற்று நடக்கிறது.
தொடர்ந்ததொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
9 நாளான நாள் இரவு 9 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி உடன் அம்மன் வெள்ளி பல்லக்கு பவனி நடக்கிறது. பத்தாம் நாள் காலை 4:30 மணிக்கு அடியந்திர பூஜை, ஐந்து மணி முதல் பூமாலை குத்தியோட்டம், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1மணிக்கு ஒடுக்க பூஜை தொடர்ந்து திருக்கொடி இறக்கப்படுகிறது.
விழா நாட்களில் மாநாடு திடலில் இந்து சமய மாநாடு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.