மதுரை, நவம்பர் 18 –
மதுரை அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் கட்டண உயர்வை கண்டித்து உள்ளுர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம் கூறியதாவது
இந்த பகுதி வாகன ஓட்டிகள் இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 145 ரூபாய் ஒருமுறை செல்வதற்கும் இருமுறை சென்றுவர ரூபாய் 215 வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.
எனவே ஐந்து மடங்காக உயர்த்தி உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிப்பு செய்வதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்
என்று கூறினார்.
இதனால் சுங்கச்சாவடியில் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பாதையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த 50 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுங்க சாவடி மேலாளர் திருப்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மறு உத்தரவு வரும் வரை கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



