By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாடிப்பட்டியில் துறை வாரிய அதிகாரிகள் வரவில்லை‌ என்றால் கூட்டத்தைப் புறக்கணிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்:
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வாடிப்பட்டியில் துறை வாரிய அதிகாரிகள் வரவில்லை‌ என்றால் கூட்டத்தைப் புறக்கணிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்:
மதுரை

வாடிப்பட்டியில் துறை வாரிய அதிகாரிகள் வரவில்லை‌ என்றால் கூட்டத்தைப் புறக்கணிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்:

Last updated: June 12, 2025 12:38 pm
June 12, 2025
56 Views
Share
SHARE

வாடிப்பட்டி, ஜூன் 12 –

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார்கள் ரகுபதி புவனேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரைச் செல்வி, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் செந்தில் குமார், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில்,
வாடிப்பட்டி பகுதியில் பருவ மழையை எதிர்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வறண்ட கண்மாய்களை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்க வேண்டும். கண்மாயில் இருந்து வெளிவரும் வரத்துகால்வாய் மற்றும் வெளியேறும் வாய்க் கால்களை சீரமைக்க வேண்டும். வாடிப்பட்டி பேரூராட்சி எரியட்டும் மயானம் எதிரில் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். தெத்தூர் பகுதியில் மலையோர விவசாய நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து வரும் அரசு பஸ்கள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தைப் புறக்கணித்து விட்டு புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் அதிகாரிகள் வராததால், அதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பிற துறை அதிகாரிகளைக் கட்டாயம் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை என்றால் விவசாயக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்யப் போவதாக காரசார விவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில், நீர்ப் பாசன ஆய்வாளர் முகமது சுல்தான், மற்றும் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம்
தொழில் நுட்ப உதவியாளர் பதவி உயர்விற்கான ஆணை
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்
மதுரை அருகே சரக்கு வாகனம் தீப்பிடித்தது
மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ரூ : 25 ஆயிரத்துடன் மனைவி மாயம் – கணவர் புகார்

April 9, 2025
40 Views
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
மலைதேனிக்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
பட்டா வழங்க கோரி அலுவலகத்தை முற்றுகை!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account