மதுரை ஜனவரி 30,
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மத்தியசிறையில் உள்ள இல்ல வாசிகளின் நலனுக்காக பிரிசன் மினிஸ்ட்ரி ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனம் மற்றும் உசிலம்பட்டி சுகாலயா நல வாழ்வு மையம் இணைந்து நடத்திய சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் மருத்துவ முகாமினை மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மு.சதீஷ்குமார் துவக்கி வைத்தார்கள்.
இம்மருத்துவ முகாமில் 260 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்