நாகர்கோவில் ஜூன் 25
கன்னியாகுமரி மாவட்டம் நல்லூர் பகுதி திமுகவின் பேரூர் செயலாளராக உள்ளவர் சுதன், இவர் தனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் இடலாக்குடி சாலையில் கடந்து செல்லும் போது தனது மேல் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்துள்ளது. குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் தேங்கி கிடந்தது. இதில் செல்போன் தவறி விழுந்ததால் அவரால் எடுக்க முடியவில்லை அது மட்டுமல்லாமல் அந்த சாலை வழியே வாகனங்கள் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் செல்போனை தேடி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே தனது நண்பர்களை அழைத்து ஆயுதங்கள் கொண்டு வந்து தண்ணீரை மாற்று வழிக்கு திருப்பி விட்டு தேடும் பணியில் ஈடுபட்டார் ஆனால் செல்போன் கிடைக்கவில்லை இந்த விரக்தியில் இது போன்ற சாலைகளால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் உயிரையும் பறிகொடுக்க வேண்டியுள்ளது என புலம்பி தீர்த்தார் தற்போது இந்த சாலையில் மம்மூட்டி கொண்டு செல்போன் தேடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.