By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
கனஂனியாகுமரிமாவட்டம்

தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ

Last updated: October 22, 2024 11:31 am
October 22, 2024 17 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக்- 22,

 

இந்த இரண்டு வாகனங்களையும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நிலமாமூடு பகுதியை சேர்ந்த சங்கீத் 28, மற்றும் அருமனையை அடுத்த ஓடவள்ளி பகுதியை சேர்ந்த மிதுன் 26 ஆகியோர் டிரைவர்களாக பணிபுரிந்து வந்தனர்.

 

வெகு நாட்களாக இருவரும் தங்களிடம் வேலை பார்த்து வந்ததால் தம்பதியினர் இரண்டு இளைஞர்களையும் முழுமையாக நம்பி தங்களது உறவினர்கள் போல் நினைத்து தங்களது வீட்டிற்குள் இயல்பாக வந்து செல்லும் அளவிற்கு பழகி வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர்கள் இருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தம்பதியினரிடம் தகராறில் ஈடுபட்டு வேலையை விட்டு சென்றுள்ளனர்.இவர்கள் வேலையை விட்டு சென்ற சில நாட்களில் தம்பதியினரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண்ணில் இருந்து ஒருமுறை பார்த்ததும் அழியக்கூடிய நிலையில் வீடியோ ஒன்று வந்துள்ளது.

 

இதனை தம்பதியினர் ஓப்பன் செய்து பார்த்தபோது அதில் தம்பதியினர் இருவரும் தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ இருந்துள்ளது.

 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இந்த வீடியோ அனுப்பிய நபர் யார் என்று விசாரணை நடத்தி உள்ளனர்.

 

ஆனால் அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியாமல் மிகுந்த மன வருத்தத்தில் காணப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரது செல்போன் வாட்ஸ்அப்பிலும் அதே வீடியோ வந்துள்ளது.இதனை கண்ட அந்த நபர் அந்த வீடியோ தனது செல்போனில் அனுப்பியது உங்களிடம் வேலை பார்த்து வந்த சங்கீத் என்று கூறி உள்ளார்.

 

காரணம் அந்த வீடியோ வந்த எண் அவருடைய போனில் ஏற்கனவே பதிவாகி இருந்துள்ளது. இதனை கொண்டு உறுதி செய்த அவர் தம்பதியினரிடம் கூறி உள்ளார்.இதற்கிடையே தம்பதியினருக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தங்களிடம் உங்களுடைய அந்தரங்க வீடியோ உள்ளது. அதனை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பத்து லட்சம் ருபாய் தரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளனர்.

 

முதலில் பயந்த தம்பதியினர் பின்னர் தைரியத்தை வர வைத்துக்கொண்டு வெள்ளறடா காவல்நிலையத்திற்கு சென்று இது சம்பந்தமான வாட்ஸப் ஆதாரங்களை காண்பித்து புகார் அளித்துள்ளனர்.

 

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட வெள்ளறடா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சங்கீத் மற்றும் மிதுன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் இருவரையும் தேடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

March 2, 2025 13 Views
118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம்
சீரடி ஸ்ரீ அக்ஷய பாபா ஆலயத்தில் 12ஆம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா
சூப்பர் சரவணா ஸ்டோர்
ஐந்தருவியில் 10 அடி ராஜநாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?