மதுரை மாவட்டம் திருமங்கலம் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்ட அறிவுரை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் இயங்கி வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பாரதி முன்னிலை வைத்தார் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்தும் குழந்தை திருமண ஒழிப்பு குறித்தும் பிறப்பு இறப்பு பதிவின் அவசியம் குறித்தும் விளக்கம் தனியார் பள்ளியில் 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்தும் உரையாற்றப்பட்டது இதில் தலைமை ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



