தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் கட்டப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் அறை கட்டிடம் மற்றும் தென்காசி மாவட்டம் அழகாபுரியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினையும் சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து
குற்றாலம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் கட்டப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் அறை கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.



