கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி.கண்கார்டியா பார்வையற்றோர் பள்ளியில் பயின்று, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 525 மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவன் எம்.திலீப்பன் மற்றும் 519 மதிப்பெண் பெற்ற மாணவன் டி.நவீன் ஆகியோரை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, இனிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, தலா ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள். உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளனர்



