சேலம், ஆக.20&
சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு “ருஷ்ண தரிசனம் திருவிழா” என்கிற சிறப்பு கண்காட்சி ஆகஸ்ட் 19ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடக்கிறது.
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட களிமண், காகிதக் கூழ், மார்பில் துகல் பொம்மைகள், பஞ்சலோகம், பித்தளை மற்றும் கருப்பு உலோக சிலைகள், தஞ்சாவூர் மற்றும் நு£க்க மர உட் பதிப்பு ஓவியங்கள் போன்ற எண்ணற்ற வகையான கிருஷ்ணர் சிலைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து சேலம் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ரா.நரேந்திரபோஸ் கூறியதாவது:
களிமண் மற்றும் காகிதகூழ் குழந்தை கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர், வெண்ணை கிருஷ்ணர் என பல்வேறு வடிவான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சியில் குறைந்த பட்சம் ரூ.100 முதல் ரூ.40,000 வரையில் பல வகை கிருஷ்ணர் சிலை இடம் பெற்றுள்ளன. பூஜை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர மக்கள் வாங்கி கோகுலாஷ்டமி விழாவை மகிழ்வாக கொண்டாட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.