கருங்கல், நவ- 2
குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ் மகன் ஜெகன் (31), அதே பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடான் மகன் வினு (31). இருவரும் நண்பர்கள். கேரளா மாநிலம் திருச்சூரில் திருமண மண்டபங்களில் அலங்கார வேலை செய்து வருகின்றனர். தற்போது தீபாவளி விடுமுறையாக ஊருக்கு வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் பைக்கில் கருங்கல் அருகேயுள்ள பாலூர் – தேங்கா பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பினு ஓட்டி சென்றார். அப்போது எதிரே வந்த டெம்போ ஒன்று பினு ஓட்டிய பைக்கில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினு , ஜெகன் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கருங்கல் போலீசார் இரு உடல்களையும் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டெம்போ டிரைவர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த தேவலிஜின் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



