By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

Last updated: December 6, 2025 7:13 pm
December 6, 2025
58 Views
Share
SHARE

தக்கலை, டிச. 6 –

தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (34). இவர் பத்மநாபபுரம் அரண்மனை அருகே கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது கடையருகே முருகதாஸ் என்பவர் மற்றொரு கடை நடத்தி வருகிறார். முருகதாஸ் தனது கடையின் முன் பகுதியில் ஏராளமான பொருட்களை தொங்க விட்டு விற்பனை செய்திருக்கிறார். அவ்வாறு வைத்திருப்பது மல்லிகாவின் கடையை மறைப்பது போன்று இருந்துள்ளது. இதனால் மறைக்காதவாறு பொருட்களை தொங்கவிட வேண்டும் என கூறி இருக்கிறார்.

ஆனால் முருகதாஸ் அதனை கேட்கவில்லை. எனவே அவரின் மீது தக்கலை போலிஸ் நிலையத்தில் மல்லிகா புகார் செய்தார். ஆனால் அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் முருகதாஸ் தனது செயலை மாற்றிக் கொள்ளவில்லை. ஆகவே மல்லிகா மீண்டும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தக்கலை போலீசில் மீண்டும் சென்று புகார் செய்தார். ஆனாலும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த மல்லிகா நேற்று காலை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்று போலிஸ் நிலையம் உள்ளே திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார் தீக்குளிக்க சென்ற மல்லிகாவை தடுத்து நிறுத்தினர். பின்பு அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையத்தில் இளம் பெண் தீ தீக்குளிக்க முயன்ற சம்பவம் தக்கலையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதரவற்றோர் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ஜீவன் எயிட் டிரஸ்ட்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முன்பு தர்ணா பேராட்டம்
எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
தென் மேற்கு பருவமழை தீவீரம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்

March 29, 2025
71 Views
திருப்பூர் மாநகரத்திற்கு 2 புதிய டிசிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
விவேகானந்தருக்கு பின் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் மூன்று நாள் தியானம் செய்யும் மோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account