தென்காசி, ஜூன் 17 –
தென்காசியில் இயங்கி வரும் ‘பசியில்லா தமிழகம்’ ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்திற்குத் தேவையான அவசர மருத்துவ உபகரணங்கள் மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பாக உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
‘மை ஜீவன் எயிட் டிரஸ்ட்’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஷிபு ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்காக நிதி உதவி திரட்டினார். இதனைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் அந்த அவசர மருத்துவ உபகரணங்களை தென்காசியில் உள்ள பசியில்லா தமிழகம் இல்லத்திற்குப் அனுப்பி வைத்தார்.
இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி பராமரிப்பிற்கும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும் இந்த உபகரணங்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என இல்ல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி பகுதியில் உள்ள ஆதரவற்றோரின் நலன் கருதி இந்த மருத்துவ உதவிகளைச் செய்து கொடுத்த மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் ஷிபு மற்றும் ஒருங்கிணைத்து இல்லத்திற்குக் கொண்டு சேர்த்த ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் ஆகியோருக்கு பசியில்லா தமிழகம் இல்லத்தின் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.



