தென்தாமரைகுளம், டிச. 2 –
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வந்த நிலையில் தென் தாமரை குளம் பேரூராட்சி மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சியில் சிறப்புடன் செயல்பட்டதற்காக அதன் செயல் அலுவலர் சந்தோஷ் குமார் மற்றும் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கும் மேலும் இந்த பணியில் ஈடுபட்ட அலுவலக ஊழியர்கள், களப் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ் குமாரிடம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.



