மார்த்தாண்டம், டிச. 4 –
நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட, கன்னங்கரை முதல் கொட்டைக்காடு -கொல்லம்விளை சாலை, அருள்குன்று – தோப்பு சாலை, மேலமணலி – மேலோட்டுவிளை சாலை, அடையாமடை மாடன்தரை முதல் வைத்தியசாலை செல்லும் சாலை ஆகிய நான்கு சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.
இந்த பழுதடைந்த சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நான்கு சாலைகளையும் சிரமைக்க ரூ. 90.74 லட்சம் – முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து குறிப்பிட்ட நான்கு சாலைகள் சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், நடைக்காவு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெங்கின்ஸ், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், நடைக்காவு ஊராட்சி முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ஜாண், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ், ஆமோஸ், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



