By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

Last updated: December 6, 2025 8:29 pm
December 6, 2025
36 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 6 –

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அம்பேத்கார் நினைவு நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை மனோ தங்கராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் நல்ஆட்சியில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

இன்றைய நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ரூ.23.33 இலட்சம் மதிப்பில் 42 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், 20 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், ஒரு பயனாளிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டாவும், பழங்குடியின நலத்துறை சார்பில் ரூ.5.73 கோடி மதிப்பில் 112 பயனாளிகளுக்கு பழங்குடியினர் குடும்ப நல அட்டைகளும், பழங்குடியினர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு வீடுகளும், ஒரு பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரண தொகையும், தாட்கோ சார்பில் ரூ.1.39 கோடி மதிப்பில் 18 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் கடனுதவிகளும், பிரதம மந்திரியின் பொது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அட்டை 20 பயனாளிகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ரூ.1.20 இலட்சம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு நலிந்தோர் குடும்ப நல்ல திட்டத்தின் கீழ் உதவித்தொகையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.11 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் 8 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், வட்டார வணிக வள மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், 51 மகளிர்களுக்கும் சுய உதவி குழு அடையாள அட்டைகளும், கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.23.36 இலட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் ஒரு பயனாளிக்கும், கிசான் கிரெடிட் கார்டு 40 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடி மதிப்பில் 13 பயனாளிகளுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.0.20 இலட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரமும், ஒரு பயனாளிக்கு கைபேசியும் என மொத்தம் 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மாவட்ட வன அலுவலர் அன்பு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது
குலசேகரம் போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
காவல்துறைக்கு மக்கள் மீது உள்ள அக்கறை கூட மாநகராட்சிக்கு இல்லை; பொதுமக்கள் வேதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையராக

January 9, 2025
179 Views
சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டி
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டி
டெங்கு பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account