குளச்சல், டிச. 26 –
கடியப்பட்டணம், அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ஜார்ஜ் (36). மீன்பிடி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த டென்னிசன் என்பவரின் மனைவியான அருள் பிரதிஷா என்பவரிடம் 8 பவுன் நகையை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் நகையை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் தனது மனைவியின் நகையை தருமாறு டென்னிசன் கேட்டு வந்துள்ளார்.
சம்பவ தினம் மணவாளக்குறிச்சியில் உள்ள தனியார் பாரில் டென்னிசன் தனது நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். அப்போது அங்கு ஆன்டனி ஜார்ஜிம் மது குடிக்க சென்றுள்ளார். ஏற்கனவே நக்கை தொடர்பான பிரச்சனை இருந்த நிலையில் டென்னிசன், ஆண்டனி ஜார்ஜிடம் நகையை திருப்பி தருமாறு கேட்டு தகராறுசெய்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அப்போது அங்கிருந்து ஆன்டனி ஜார்ஜ் வெளியேற முயன்றார். ஆனால் டென்னிசன் மற்றும் நண்பர்கள் இணைந்து பாரின் கதவை அடைத்துவிட்டு ஆண்டனி ஜார்ஜை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மீனவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பகிர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


