By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு

Last updated: January 3, 2026 8:42 pm
January 3, 2026
42 Views
Share
SHARE

நல்லூர், ஜனவரி 3 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய பழப் பயிர்களில் ஒன்றாக வாழை திகழ்கிறது. வாழையில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் சிகாடோகா இலைப்புள்ளி நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும். இந்நோய் தாக்கிய இலையின் மேற்பகுதியில் வெளிறிய மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி அவை விரைந்து நீள் வட்டத்தில் பழுப்பு நிறமடைகின்றன. பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது.

பின்னர் இலை காய்ந்து சருகாகின்றது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைபடுகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மரத்தில் குலை சிறுத்தும், காய்கள் முதிர்ச்சி அடையாமல் பிஞ்சிலேயே பழுத்தும் விடுகின்றன. இந்த நோயை பரப்பும் பூஞ்சாணம் மழை, பனித்துளிகள் மற்றும் காற்று மூலமாக விரைவில் பரவுகிறது. நெருக்கமான நடவு, மண்ணில் அதிக களைகள், வடிகால் வசதி இல்லாத மண், பனி மற்றும் மழைக்காலங்கள் போன்ற சூழ்நிலைகளில் இந்நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி அகற்றி தீ வைத்து அழிக்க வேண்டும். வாழைத் தோட்டங்களில் நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும். களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

ஒரு மாத இடைவெளியில் 1 லிட்டர் நீரில் ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது ஒரு கிராம் பினோமில் அல்லது 2 கிராம் மான்கோசெப் அல்லது 2.5கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் ஒரு மருந்தினை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். புரோபி கோனசோனல் 25 நுஊ 500 மில்லி லிட்டர் எக்டர் மற்றும் மினரல் எண்ணெய் 10 மிலி 1 லிட்டருக்கு கலந்து தெளிக்கவும் மற்றும் திரவம் டீப்பால் நல்லது சோப்பு கரைசல்5 மிலி 10 லிட்டர் மருந்து கடைகளுடன் சேர்க்கவும். மேற்கண்ட மேலாண்மை முறைகளை கடைப்பிடித்து வாழையில் சிகாடோகா இலை புள்ளி நோயை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் க.வ.நக்கீரன் அவர்கள் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அதிமுக புதிய மாவட்ட செயலாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

இந்தியாவிலே யாரும் இதுவரை நிகழ்த்தாத போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு: பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி

July 20, 2026
8 Views
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோபியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
துளிர் தொண்டர்களுக்கான பயிற்சி
மதுரை மாநகர் காவல்துறை அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account