கம்பம்,மே:02
தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை கம்பம் யாதவர் இளைஞர் அணி சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது. தற்பொழுது தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விதமாக இந்த நீர் மோர் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அழகு குத்துதல்,முளைப்பாரி எடுத்தல் பால்குடம் எடுத்தல், உருண்டு கொடுத்தல், போன்ற நேர்த்திக்கடனை கம்பம் கௌமாரியம்மனுக்கு செலுத்தினர்.இதில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏராளமான போலீசார், மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



