கோவை மாவட்டம்
சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டம்.
கோவை மாவட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுல்தான் பேட்டை வட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜாக்டோ ஜியோ வட்டாரத் தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் ஆசிரியர் சங்கம் விஜயலட்சுமி, வட்டப் பொருளாளர் கல்பனா வட்ட செயலாளர் சாமிநாதன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், இரசியகுமார், நெடுஞ்சாலை துறை வேல் குமார், வட்டார பயிற்றுனர் நிர்மலா, சத்துணவு ஊழியர் மாநில செயலாளர் யோகேஸ்வரன், பட்டதாரி ஆசிரியர் லதா, சத்துணவு ஊழியர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி,சுல்தான் பேட்டை வட்டார பொறுப்பாளர் தோழர் ஜெகநாதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ ஜியோ மற்றும் மாவட்ட தலைவர் அரசு ஊழியர் சங்கம் என 150 க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.