அஞ்சுகிராமம் டிச-13
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வு கூட்டத்தில் குமரி மாவட்ட செயலாளர் சதீஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் டிடிபி ராஜா தலைமையில் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசும்பொழுது
திமு கழகத்தில் 23 அணிகள் இருந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கு தகவல் தொழில்நுட்ப அணி தான் முதல் அணியாக இருக்கும் .அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்து செயல்படுவதில் பெருமை கொள்வதோடு 200 தொகுதிகளுக்கு மேலாக வென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு உங்களுடைய பணி முழுமையாக இருக்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ட அணி செயலாளர் சதீஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளரும்,அஞ்சுகிராமம் பேரூராட்சி துனை தலைவர் காந்திராஜ் ஆகியோரின் களப்பணி பாராட்டக்குரியது என கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நிஜித், மாவட்ட தகவல் தொழில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் யெணட் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ், அஞ்சு கிராமம் பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரஜீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.