சென்னை, ஆகஸ்ட்- 29, இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங், இந்த ஆண்டு பண்டிகை சீசன் தொடங்குவதற்கு முன்னதாக 10 வாஷிங் மெஷின்களை அறிமுகம் செய்யும் தனது திட்டத்தை அறிவித்திருக்கிறது. இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் ஃபிரண்ட்-லோடு ஏ.ஐ பவர்டு வாஷிங் மெஷினுக்கான ஒரு விளம்பர முன்னோட்டத்தை (டீசர்) இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்த புதிய, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட வாஷிங் மெஷின்கள், இந்திய நுகர்வோர்களுக்காக சாம்சங் அறிமுகம் செய்யும் அதன் பிரீமியம் பெஸ்போக் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் வீட்டு சாதனங்கள் தொகுப்பின் ஒரு அங்கமாகும். ஸ்மார்ட்டான இல்ல அனுபவத்தை புரட்சிகரமானதாக மாற்றுவதற்கு நுண்ணறிவுமிக்க மற்றும் உள்ளுணர்வு தீர்வுகளுடன் மேம்பட்ட இணைப்பு திறன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை இவைகள் வழங்குகின்றன.
சாம்சங் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இந்த ஆண்டு பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட வாஷிங் மெஷின்களின் அணிவரிசையை சாம்சங் அறிமுகம் செய்யும். சலவை செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் முழு அளவிலான செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கங்கள் கொண்ட 10 மாடல்கள் இப்புதிய தொகுப்பில் இடம்பெறும்
சாம்சங் இந்தியா நிறுவனத்தின் வாஷிங் மெஷின்களது ஒட்டுமொத்த தொகுப்பை இப்புதிய அறிமுகம் கணிசமாக விரிவாக்குவதுடன், லாண்ட்ரி சந்தையில் தற்போதைய போக்கை இந்த சீரிஸ் பெரிதும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது