சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் வட்டளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25-ன் கீழ் பல்வேறு வகையான வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் அவர்கள் இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



