கமுதி பகுதியில் சட்டவிரோதமாக வட மாநில மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூா் உள்பட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனைகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுவிலக்கு ஆயத்தீா்வை போலீஸாா் மற்றும் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மதுக் கடைகள் திறக்கும் நேரத்துக்கு முன்பு காலை நேரங்களில் கள்ளச் சந்தையில் மதுப்புட்டிகள் விற்கப்படுவது குறைந்துள்ளது.
இந்த நிலையில் கள்ளச் சந்தையில் மதுபுட்டிகள் கிடைக்காததால், இதற்கு பதிலாக வட மாநிலங்களிலிருந்து குறைந்த விலையில் மதுப் புட்டிகளை வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இது கமுதி ஆற்றங்கரை அருப்புக்கோட்டை ரோடு வழிவிட்டஅய்யனார் கோயில் பகுதி மண்டலமாணிக்கம் பகுதிகளில் விற்பனைசெய்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
மேலும், கமுதி-மதுரை சாலையில் கோட்டைமேடு ஆலமரம் பகுதியில் வடமாநில காலி மதுப் புட்டிகள் குவியல்களாக கிடப்பதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ஆகவே காவல்துறையினர் தூரித நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்