கன்னியாகுமரி அக் 30
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள பங்குப் பேரவை நிர்வாகிகளுடன் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடினார். இதற்காக அங்கு சென்ற கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தை கன்னியாகுமரி பங்குதந்தை உபால்டு வரவேற்றார். இதனைத் தொடர்ந்து ஊர்த் தலைவர் டாலன், செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன் ஆகியோருடன் கலந்துரையாடினார். குறிப்பாக அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பங்குப் பேரவை நிர்வாகிகள், தங்கும் விடுதிகளிலிருந்து வருகின்ற கழிவுநீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், துர்நாற்றம் ஏற்பட்டு இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள் என்றும், இதனை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொணடனர்.
இதுகுறித்து முன்னாள் தளவாய்சுந்தரம் கலந்துரையாடி பேசும் போது தெரிவிக்கையில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட இரட்சகர் தெரு கடற்கரை பகுதியில், தங்கும் விடுதிகளிலிருந்து வருகின்ற கழிவு நீரை பாதுகாப்பான முறையில் ஓடைகள் அமைத்தும், கழிவு நீரை சுத்திகரித்து திறந்த வெளிப்பகுதிகளில் கழிவுநீர் வெளி வராத வகையில் சிறந்த முறையில் பாதுகாப்பாக கடலில் விடுவதற்கு தேவையான அளவு அரசு நிதி ஒதுக்கீடு செய்து, இப்பணிகளை சிறப்பாக செய்து மீனவர்களின் நலன்காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காலதாமதம் செய்யாமல் இக்கடற்கரை பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படாத வகையில் துரிதமாக இப்பணிகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இது தொடர்பாக பங்கு பேரவை நிர்வாகிகள் கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலருடன் கலந்து ஆலோசிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். மேலும் மீனவ மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க முற்படும் போது இதில் பங்குபேரவை நிர்வாகிகளின் தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் எனறும் அவர் கூறினார்.
உடன் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெஸீம், கன்னியாகுமரி பேரூர் கழகச் செயலாளர் எழிலன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.