ராமநாதபுரம், செப். 1 –
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இருமேனி கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இருமேனியில் அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவ்வர்ஷா தலைமை வகித்தார். கிழக்கு கிளைத் தலைவர் அகமது சரிபு கனி வரவேற்புரை ஆற்றினார். கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் துவக்க உரையாற்றினார். மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் வாழ்த்துரை வழங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்து சிறப்புரை ஆற்றினார்.
மாவட்டம் பொதுச் செயலாளர் சுலைமான், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்ட துணை தலைவர் ஜெமீலு நிஷா, மருத்துவ அணி மாவட்ட தலைவர் காதர் கனி, இருமேனி முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹபிபுல்லா, தொகுதி தலைவர் பீர் மைதீன், தொகுதி செயலாளர் அமீனுல்லா, மண்டபம் ஒன்றிய தலைவர் பவுசில் அமீன், மண்டபம் ஒன்றிய செயலாளர் அஜ்மல் கான், கிளை தலைவர் முஹம்மது ஜைனி, கிளை பொருளாளர் சுலைமான், மேற்கு கிளை தலைவர் அப்துல் ஹக், கிழக்கு கிளைச் செயலாளர் தானிஷ் முகமது, பிறப்பின் வலசை தலைவர் அப்துல் அஜித், என் மனம் கொண்டான் தலைவர் அப்துல் ரஷீத், புது நகரம் தலைவர் முகமது நகிபு, இஸ்லாமிய இளைஞர் அமைப்பு உதவி தலைவர் முகமது சர்பர், டாக்டர் சலீம் அலி, அலைக்காத்தர் வலசை தலைவர் ராசு, மாந்தோப்புத் தலைவர் பூமிநாதன், குப்பாணி வலசை தலைவர் ராஜா என்ற முனியசாமி, சாலை வலசை தலைவர் முனியராஜ், மரவெட்டி வலசை தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்த விழாவில் பள்ளி தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மண்டபம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சகுபர் சாதிக் நன்றி கூறினார்.



