தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் தொடர் விபத்துகளால் அதிக அளவில் உயிர் சேதமும், பொருட்கள் சேதழும் ஏற்படுகிறது. இதனால் அந்த ஆபத்தான சாலையை சீரமைத்து உயிர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ. 905கோடி மதிப்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் தொப்பூர் கணவாயில் சால சீரமைப்பு மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இந்த திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் பகுதி தொடங்கும் இடம் கட்டமேடு,ஆஞ்சநேயர் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துக்கள் நடந்த இரட்டைப்பாலம் உள்ளிட்ட இடங்களை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் உயிர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து பாளையம்புதூர் சுங்கச் சாவடி அலுவலகத்தில் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது செய்லாக்க அழகு திட்ட இயக்குனர் சீனிவாசலு, பில்கான் நிறுவனத் துணைத் தலைவர் சின்ஹா, தாசில்தார் லட்சுமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.



