தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இலளிகம் ஏரியில் இருந்து விவசாய / மட்பாண்ட தொழிலுக்கு வண்டல் / களிமண் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அவர்கள் ஆய்வு செய்தார். உடன் துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் முனைவர்.கு.பன்னீர்செல்வம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார், நிர்வளத்துறை உதவி பொறியாளர் மாலதி, உதவி புவியியலாளர் புவனமாணிக்கம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோத்தமன் மற்றும் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.



