சென்னை, ஜூன், 13
கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் பின்புறம் சேமாத்தம்மன் நகரில் உள்ள பள்ளிவாசலை இடிப்பதற்கு சி .எம்.டி.ஏ நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அதை எதிர்த்து
ஜமா அத் நிர்வாகிகள் தலைமையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இஸ்லாமிய இயக்கங்களான , எஸ் .டி .பி. ஐ, த.மு.மு .க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்த 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
மசூதி பாதுகாப்பு குழு தலைவர் மன்சூர் காசிஃபி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது..
கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் செக்டார் -3 ல் இருக்கக்கூடிய 1224 சதுர அடி உள்ள இடத்தில் பள்ளிவாசல் செயல்பட்டு கொண்டு வருகிறது,
முறைப்படி இந்த இடம் கிரையம் செய்யப்பட்டு 43 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, இஸ்லாமிய சமுதாய மக்களுடைய காசை கொண்டு கட்டப்பட்டு, பத்திரப்பதிவு மற்றும் அதற்காக வேண்டியுள்ள அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டு முறைப்படி பள்ளிவாசலாக இயங்கிக் கொண்டிருக்கிறது,
சமூக விரோதிகள் சிலர் இந்த பள்ளிவாசல் மீது காழ்ப்புணர்வு கொண்டு இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இறுதியில் இந்த மசூதியை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது.
எந்த காரணத்தைக் கொண்டும் மசூதி இடிக்கப்படக்கூடாது என்பதற்காக வேண்டி இங்கு நாங்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம்,
இந்த பள்ளிவாசல் இடம் சி.எம்.டி.ஏ.விற்கு எந்தத் விதத்திலும் தேவைபடாது.ஏற்கனவே இங்கு 2000 குடும்பங்கள் குடியிருக்கின்றன.
இது ஆக்கிரமிக்கப்பட்ட இடமும் கிடையாது, இதற்கு முன்பாக முறைப்படி நிலம் கையகப்படுத்தப்பட்ட இடமும் கிடையாது, நிலம் கையகப்படுத்துவதற்காக வேண்டி கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டும் பொழுது இவ்வளவு இடம் போதும் என்பதற்காக மதில் சுவரும் கட்டி மதில் சுவருக்கு பின்புறம் தான் பள்ளிவாசலின் இடம் இருக்கிறது, மசூதியின் இடத்திற்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் இடையில் வீடுகள் இருக்கிறது . இருந்தும், மிக சொற்பமான இடத்தை சி.எம்.டி.ஏ எடுத்துக் கொண்டு எதுவும் செய்யவும் முடியாது .
ஆகவே தமிழக அரசு கனிவுடன் இதனை பரிசீலித்து ஏதாவது ஒரு வழியில் பள்ளிவாசலை பாதுகாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மசூதி பாதுகாப்புக்குழு சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என்றார்



