தென்தாமரை குளம், ஜூலை 15 –
சந்தையடியில் ஊர் பொது மக்கள் சார்பில் இன்று காலை காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா படிப்பகம் முன்பு கொண்டாடப்பட்டது. விழாவில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மனோகரன், சிவராஜன், நவீன் சுதாகர், அறக்கட்டளை அறங்காவலர்கள் ராஜலிங்கம், பால்ராஜ், விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் குமார் (எ) ராஜா, துரை ராஜன், தானுலிங்க லிபாஸ்கர், பகவதி நாடார், தங்க நாடார், சுதன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



