By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தருமபுரி

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Last updated: July 3, 2025 8:18 pm
July 3, 2025
72 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 03 –

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சமீப காலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருள் டாக்டர் அன்புமணி ராமதாஸை வேண்டாத வார்த்தைகளால் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அன்புமணி ராமதாஸ் இல்லை என்றால் அருள் இல்லை. அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். உலக அளவில் பாராட்டுகளை பெற்றவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூண்டுதல் படி பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்க வேண்டும். பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அருள் இப்படி பேசி இருக்கிறார். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே உள்ள விரிசல், உரசல் நின்று விட வேண்டும். டாக்டர் ராமதாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். பாமகவின் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூன்று பேர் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அந்த மூணு பேரில் ஒருவர் அருள் என்பது அவருடைய பேச்சின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. வருகின்ற சட்ட சபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற முடியாது. இதனால் எதிரிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற திமுகவின் முயற்சிக்கு அருள் துணை போகிறார்.

பாமக பெரியாரை பின்பற்றும் சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த அருள் ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி தலைவர்களின் காலில் விழுவது சுயமரியாதைக்கு எதிரானது. அவர் மீது டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில துணைத்தலைவர்கள் செல்வம், சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர்கள் சண்முகம், இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் முருகசாமி, பசுமை தாயக மாநிலத் துணைச் செயலாளர் மாது, மாவட்ட துணை தலைவர் அல்லி முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை
தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவிலில் மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கல்

July 28, 2025
45 Views
குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் 56 சதவீதம் நிறைவு
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account