ஊட்டி.டிச.14.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலு குறைந்து தென் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுவதால் தொடர்ந்து சாரல் மழையுடன் காற்றும் வீசுவதாலும் கடும் குளிரும் அதிகரிக்கப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகமான ஈரப்பதத்தால் மலை சரிவுகளில் மரங்கள் வேரோடு சாய்வதாலும் சாலைகள் துண்டித்து பல போக்குவரத்து பாதிப்படைந்து பல அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்பதாலும் மாவட்டத்தில் நிர்வாகம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தாழ்வான விவசாய நிலங்களில் நீர் தேங்கி மலை காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைவதால் மலை காய்கறி விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி மாவட்டத்தில் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் பேரிடர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன எனவே பொதுமக்களும் மாணவ மாணவிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.