நாகர்கோவில் பிப் 14
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களுடான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா. தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்கவும், பொதுமக்கள். இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் வகையில், மாபெரும் 6வது புத்தகக் கண்காட்சி வரும் பிப்பரவரி மாதம் 19.02.2025 முதல் மார்ச் மாதம் 01.03.2025 வரை நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் புத்தக திருவிழாவில் சுமார் 120-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இவ்வரங்குகளில் பொது அறிவு, தொழில்நுட்பம், அறிவியல், வரலாற்று சரித்திரம், குழந்தைகளுக்கான படைப்புகள், சிறுகதைகள், கவிதை தொகுப்புகள், கணினி தொடர்பான படைப்புகள், ஆராய்ச்சி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.
மேலும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் இலக்கிய ஆளுமையின் சொற்பொழிவுகள். சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்குகள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து சேர்ந்த கலைஞர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நடன நிகழ்ச்சிகள், கலை இலக்கிய போட்டிகள், பாரம்பரிய உணவு வகைகள், கவி மன்றம். இசை மன்றம். மண்ணின் கலைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் புத்தக கண்காட்சியின் நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் வருவாய் துறை. ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட நூலகம், மகளிர் திட்டம், பள்ளி கல்வித்துறை. உயர் கல்வித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி, கூட்டுறவு துறை, போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு துறை. உணவு பாதுகாப்பு துறை. சமூக நலத்துறை. ஆவின், வேளாண்மை துறை. தோட்டக்கலைத்துறை, உதவி ஆணையர் (ஆயம்), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, மருத்துவ துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களிடம் புத்தக கண்காட்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைப்பதோடு, அனைவரும் புத்தக அரங்குகளுக்கு சென்று புத்தகங்களை வாங்கி பயன்பெற வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் மேல்குறிப்பிட்ட அனைத்து துறையினரும் அலுவலங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் விளம்பரப்படுத்தி, உங்கள் புத்தக கண்காட்சியினை வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டக்கோள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர். மாவட்ட நூலக அலுவலர் மேரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம் (பொது), தாஜ் நிஷா (குற்றவியல்), வட்டாட்சியர்கள் முருகன்,கோலப்பன், சஜித், ஜீலியன் ஹூவர், ராஜா சேகர், கந்தசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.