கிருஷ்ணகிரி,ஏப்.1- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் வளாகத்தில் ஜெகதேவி ஊராட்சி தனி அலுவலர் தலைமையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெகதேவி ஊராட்சி சேர்ந்த பொது மக்கள் மகளிர் மன்ற உறுப்பினர்கள் ஆடவர் குழு உறுப்பினர்கள் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் தங்கள் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி குடிநீர் கட்டணம் மற்றும் வர்த்தக வரி ஆகியவற்றை உடனடியாக இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தி ஒப்பதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பதினைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன் செய்திருந்தார்.



