திருவண்ணாமலை மாணவிகள்
மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஹாக்கி மாணவிகள் சென்னையில் கடந்த மார்ச் 03 முதல் 06 வரை நடைபெற்ற மாநில அளவிலான அஷ்மிதா ஹாக்கி லீக் சப் ஜீனியர் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றதற்கு வழங்கப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் பரிசுத்தொகை, மற்றும் பதக்கம் கோப்பையை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் – இடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.