“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் கீழ் (சாலை விபத்திற்கான 48 மணி நேர கட்டணமில்லா சிகிச்சை) பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு – திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மக்களை தேடி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை உருவாக்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை அறிந்து, அதை காலத்தில் நிறைவேற்றி வருகிறது.
அதனடிப்படையில், தமிழக சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “இன்னுயிர் காப்போம் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு முயற்சிகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் டிசம்பர்-18 2021ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மைக்காக்கும் 48 (சாலை விபத்திற்கான 48 மணி நேர கட்டணமில்லா சிகிச்சை) திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆனவை, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிப்பவருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்கள் பிற நாடு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெறலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவரும் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். விபத்து காரணமாக எந்தவொரு உயிரும் போகக்கூடாது என்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரசாணை நிலை எண். 146, உள்துறை (போக்குவரத்து-ஏ), நாள்: 15.03.2022ன்படி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர், மாநில குற்ற ஆவண காப்பகத்தின் தலைமையில் நான்கு உறுப்பினர்களுடன் கூடிய சாலை பாதுகாப்பிற்கான சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. சாலைப் பாதுகாப்பிற்கான சிறப்புப் பணிக்குழுவின் முக்கிய நோக்கம் பின்வருமாறு 1. சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணுதல், 2. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சாலை உரிமையாளர்கள் மூலம குறுகிய கால தீர்வுகளை செயல்படுத்துவதை கண்காணித்தல் மற்றும் அறிக்கை செய்தல், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குவதற்கான அனைத்துத் தொடர்புடைய ஆயத்தப் பணிகளையும் நிறைவு செய்தல், இதன் மூலம் சுமூகமான செயல்பாட்டை எளிதாக்குதல், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் “சீரான சாலைகள்”, அதாவது, சாலைகளில் நிகழும் விபத்து குறைப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டு, சாலைப் பொறியியலுக்கு தீர்வு காணவும், விபத்தில்லா தமிழகத்தை அடைய அறிவியல் பூர்வமாகவும் மற்றும் புதுமையான செயலாக்க திறன் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்தினால் நிகழும் இழப்புகளை குறைப்பதற்கும், அதனால் நிகழும் குடும்பங்களின் மருத்துவ செலவை குறைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சரால் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் “நம்மை காக்கும் 48” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான மருத்துவ செலவினங்களுக்கான நிதியினை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சிகிச்சை மறுப்பு மற்றும் தேவையற்ற இட வசதி இடமாற்றங்கள் காரணமாக ஏற்படும் தாமதங்களை மேலும் குறைப்பதை நோக்கமாக் கொண்டுள்ளது. இதன் மூலம் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையை பெருமளவு குறைக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் அதிக விபத்து நடைபெறும் 500 நெடுஞ்சாலை இடங்களை கண்டறிந்து, அதற்கு அருகாமையில் தகுதிவாய்ந்த 640 மருத்துவமனைகள் (422 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 218 அரசு மருத்துவமனைகள்) கண்டறியப்பட்டு, உடனடியாக நோயாளியை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
மாவட்ட வாரியாக அவசர சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவசரகால ஊர்தி செல்லும் கால தாமதத்தைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கோல்டன் மணி நேரத்திற்குள் சரியான நோயாளி சரியான மையத்திற்கு அழைத்து செல்லப்படுவதை உறுதிப்படுத்த அவசர கால ஊர்திகளின் சேவை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகையான மக்களுக்கும், சிகிச்சை மேற்கொள்வதற்காக, ஒரு நபருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 81 அவசர சிகிச்சை முறைகளில் பணமில்லா அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மைக்காக்கும் 48 (சாலை விபத்திற்கான 48 மணி நேர கட்டணமில்லா சிகிச்சை) கீழ் 18.12.2021 முதல் 31.12.2024 வரை குடவாசல் அரசு மருத்துவமனை, கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, நீடாமங்கலம் அரசு மருத்துவமனை, வலங்கைமான் அரசு மருத்துவமனை, நன்னிலம்; அரசு மருத்துவமனை, திருத்துறைப்;பூண்டி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, மன்னார்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 6054 சிகிச்சை பெற்றுள்ளனார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருக்கண்ணமங்கை பகுதியினை சேர்ந்த பாலசாமி தெரிவித்ததாவது..
பாலசாமியாகிய நான் குடவாசல் பகுதியில் வசித்துவருகிறேன். நான் சுயதொழில் செய்து வருகிறேன். எனது தொழில் காரணமாக வெளியூர் செல்ல வேண்டி 25.12.2024 இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது மதியம் 3 மணியளவில் விபத்துக்குள்ளாகி இருந்தேன். விபத்தினால் எனது வலது காலில் எலும்பு முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான நேரத்தில் கூட இதற்கு எவ்வளவு செவவாகும் எவ்வாறு சமாளிப்பது என்ற எண்ணம் தொடர்ந்ததது. இந்த கவலைக்குரிய எண்ணத்தினை முற்றிலும் போக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மைக்காக்கும் 48 (சாலை விபத்திற்கான 48 மணி நேர கட்டணமில்லா சிகிச்சை) மூலம் சிகிச்சை பெற்றது தெரிய வந்ததது. என்னைப்போன்ற ஏழை குடும்பத்திற்காகவும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரினை காப்பற்றும் வகையிலும் இத்திட்டத்தினை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு முதல்வர்க்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
தொகுப்பு:
மீ.செல்வகுமார், பி.காம்., பி.எல்.,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருவாரூர்