புதுக்கடை, மே- 28
குமரி -கேரளாவை இணைக்கும் நான்கு வழிச்சாலை பணியானது கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கியது. அதற்கான நிலம் தமிழக கேரளா அரசுகள் வரையறைப்படுத்தி நிலத்தை எடுத்து பணிகள் துவங்கியது. இதில் கேரளா அரசானது அவர்களுடைய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியது. குமரி மாவட்டத்தில் அடைக்காகுழி உட்பட 20 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்திய போது எல்லா வருவாய் கிராமங்களுக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்காமல் பாரபட்சம் காட்டியது.
இதில் குன்னத்தூர் கிராம அலுவலகத்துக்குட்பட்ட காப்புக்காடு பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்படைத்தனர். குன்னத்தூர் கிராம அலுவலகத்தை அடுத்த இதர கிராம அலுவலகத்தை சேர்த்த மக்களுக்கு இழப்பீடுகள் அதிகமாக வழங்கப்பட்டது. நிலங்களில் நின்ற மரங்களுக்கும் தனியாக இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் காப்புக்காடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு தான் இழப்பீடு அதிகமாக வழங்கப்படவில்லை. இவர்களில் பலருக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நான்கு வழிச்சாலைப் பணி துவங்கப்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த இப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் தங்க நாற்கரச் சாலை பணியை தொடங்கவிடாமல் முடக்கிப் போட்டனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு தருவதாக உறுதிமொழி கூறி சென்றனர். இதனால் இழப்பீடு வரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில் இழப்பீடு வழங்காமல் திடீரென்று மீண்டும் நான்கு வழிச்சாலை பணியை துவங்க திட்ட அதிகாரி வேல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் காப்புக்காடுக்கு நேற்று வந்தனர் இதை அறிந்த விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பபட் தலைமையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், காங்கிரஸ் கட்சியினரும் நிலத்துக்கு போதிய இழப்பீடு கிடைக்காத மக்களும் வந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
உடனே சம்பவ இடத்திற்கு குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கௌதம் தலைமையில், புதுக்கடை போலீசார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்திற்கு ஆயத்தமானார். உள்ளே போலீசார் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என கூறி மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கினார் திட்ட அதிகாரி எங்களுக்கு உடனடியாக பராமரிப்பு பணி துவங்க வேண்டும் என கூறினார். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் எங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவைகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் என கூறினார். தொடர்ந்து போராட்டம் நீடித்து வந்த நிலையில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து போலீஸ் தலைமையில் தங்க நாற்கரச் சாலைக்கான பணி துவங்கப்பட்டது. உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ யும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கோஷம் போட்டனர். போலீசார் தாரகை க த் பட் எம்எல்ஏ உட்பட 9 பேரை கைது செய்தனர்.
எம்எல்ஏ குமரி மாவட்டத்தில் அராஜகம் நடக்கிறது எனக் கூறினார். கைது செய்வதற்கு முன்பு ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். கைது என்ற வார்த்தை கேட்டவுடன் அனைவரும் எஸ்கேப் ஆனார்கள். முக்கிய காங்கிரஸ் பிரமுகருக்கு இங்கு ஏராளமான நிலம் இருப்பது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறப்பட்டது. இப்படி தொடர் போராட்டத்தினால் இப்பகுதி ஸ்தம்பித்தது. இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், மாநில காங் செயலாளர் ஜார்ஜ் ராபின்சன், எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,அனிதா ராஜன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு வண்டியில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதன் பின்னர் தங்க நாற்கரச் சாலை பணி துவங்கியது.
இணைப்பு – படங்கள் – காப்புக் காடில் எம் எல் ஏ உட்டட 9 பேர் கைது
பணிகள் துவக்கம்