திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பேரூராட்சி சம்பந்தப்பட்ட வாரச்சந்தை தின சந்தை நடைபெற்று வருகிறது காய்கறி மற்றும் கறிக்கடை கோழிக்கடை தினந்தோறும் நடைபெற்று வருகிறது அந்த கழிவுகளை வெளியில் எடுத்துச் செல்லாமல் அங்கேயே கொட்டி விடுவதால் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது பொதுமக்கள் முகம் சுளிக்கும்வகையில் அன்றாடம் உள்ளே வந்து செல்லுகின்றனர் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு அது சமயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோழி கழிவுகளை அகற்றி சந்தை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு நோய் பரவாமல் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாகவும் தினத் தமிழ் பத்திரிகை சார்பாகவும்தகுந்த அரசு அதிகாரிகளுக்கும் பேரூராட்சி நிர்வாகத்துக்கும் வேண்டுகோள் விடுகின்றனர்.



