கிருஷ்ணகிரி.ஏப்ரல் 03 .
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம்., குற்றவியல் நீதிமன்றம்., சிவில் நீதிமன்றம், லோக் அதாலத் என மாவட்ட அளவில் முக்கிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நீதிமன்ற கட்டிடங்களை இணைக்கும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி V.R.லதா கலந்துக் கொண்டு உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றங்களை இணைக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வயதானவர்கள்., மாற்றுத் திறனாளிகள் எளிதில் நீதிமன்றத்திற்கு வருவதற்கும்., ஒரு நீதிமன்றத்தில் இருந்து மற்ற நீதிமன்றத்திற்கு எளிதில் செல்லும் வகையில் அமைக்கபட்டுள்ளது என்று கூறினார். இதில் மாவட்ட நீதிபதிகள்., பார்கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜுலு, செயலாளர் சக்திநாராயணன், துணைத் தலைவர் குமாரசாமி, துணைத்தலைவர் கலையரசி, துணைச் செயலாளர் சிவசக்திகுமரன், நூலகர் பருக், மூத்த வழக்கறிஞர் தேவராஜன், வழக்கறிஞர்கள் தமிழ், சுரேகா, சபியுல்லா, முருகன், ராம்குமார், உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஏராளமானோர் இருந்தனர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics