அரியலூர், ஜூன்:15
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. இதில் கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வழங்காதது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று காலை 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் செந்துறை-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காவல்துறை மற்றும் ஊராட்சி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



