திண்டுக்கல் மே 15
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் பள்ளி மாணவி மா. முத்து பிரஸிகா 600 க்கு 596 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் நான்காம் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.
பள்ளி மாணவி மா.முத்து பிரஸிகாவை ஊக்கப்படுத்தும் விதமாக திண்டுக்கல் பெமி 9 நாப்கின் ஆலோசகர் எஸ்.ரூப பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவியை பாராட்டி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பெமி 9 நாப்கினை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கினார். அருகில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் என். திலகம் உள்ளார்.