போச்சம்பள்ளி அடுத்து சந்தூர் கூட்ரோட்டில் டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே போச்சம்பள்ளி டு தொகரப்பள்ளி சாலை சந்தூர் கூட்ரோடு அருகாமையில் டிராக்டர் இருசக்கர வாகனம் விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வெப்பாலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த விவசாயியான ஆறுமுகம் சம்பவ இடத்திலே பலி இந்த விபத்துக்கு காரணம் குறுகலான சாலையில் எதிரெதிரே வரும்போது விபத்து ஏற்பட்டு விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தில் ஆறுமுகம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு அதிகமாகி சம்பவ இடத்தில் உயிரிழந்தார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டுள்ளது தொடர்ந்து சந்தூர் நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது தமிழக அரசு அடிக்கடி விபத்துகளை குறித்து ஆய்வு செய்து நெடுஞ்சாலையை ஒரு வழி சாலையை விரைவில் இரு வழி சாலையாக மாற்றி விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை